இஸ்ரேல் அதிர்ச்சி... பாலஸ்தீன மக்களுக்கு ரூ.101 கோடி நிதியுதவியை அறிவித்தது பிரிட்டன்!

ரிஷி சுனக்
ரிஷி சுனக்

இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு இந்திய மதிப்பு 101.4 கோடி ரூபாய் நிதியுதவியை பிரிட்டன் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

உக்கிரமடைந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலானது 11 நாட்களாக தொடர்ந்துள்ள நிலையில் இதுவரை பாலஸ்தீனியர்கள் 2,215 பேர் பலியாகியுள்ளதுடன் 8,714 படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் அவதிக்குள்ளாகியிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு பல நாடுகள் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளனர்.

இஸ்ரேல் படை
இஸ்ரேல் படை

இந்நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு பிரித்தானியா 10 மில்லியன் டாலர் தொகையை வழங்க இருப்பதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில், ''ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீன மக்களையோ அல்லது அவர்கள் விரும்பும் எதிர்காலத்தையோ பிரதிபலிக்கவில்லை.

ஹமாஸ் அமைப்பினரால் பெரும்பாலான பாலஸ்தீனியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இன்று கூடுதலான 10 மில்லியன் டாலர் ஆதரவுடன் பாலஸ்தீனிய மக்களுக்கான பிரிட்டனின் உதவியை மூன்றில் ஒரு பங்காக அதிகரிப்பதாக அறிவிக்கிறேன்'' என ரிஷி சுனக் பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in