படைகள் குவிப்பு... இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் மூன்றாம் உலகப் போராகிறதா?

இஸ்ரேல் போர் பாதிப்பு
இஸ்ரேல் போர் பாதிப்பு

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மூன்றாம் உலகப்போராக மாறுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் நடத்தியது. இந்த தாக்குதல் இஸ்ரேல் வரலாற்றில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பாலஸ்தீனம் மீது குறிப்பாக காஸா மீது இஸ்ரேல் அரசு போர் பிரகடனம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் வான் வழி தாக்குதல்
இஸ்ரேல் வான் வழி தாக்குதல்

" இந்த தாக்குதலுக்கு காரணமான ஹமாஸ் இயக்கத்தை மொத்தமாக அழிப்போம். காஸா இருந்த சுவடே இல்லாமல் ஆக்க போகிறோம். காஸாவில் இருக்கும் பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும். நாங்கள் மிக பெரிய தாக்குதலை நடத்த போகிறோம்" என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதே நேரம் இஸ்ரேலுக்குள் ஊடுருவியுள்ள ஹமாஸ் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

போரால் பாதிக்கப்பட்ட பெண்
போரால் பாதிக்கப்பட்ட பெண்

ஹமாஸ் படையினருக்கு லெபனானில் இருந்து செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா படையினர் உதவி வருவதும் அங்கிருந்தபடி அவர்கள் இஸ்ரேல் மீது தாக்குதலும் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் ஆதரவு கொடுப்பதாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் ஏற்கெனவே அமெரிக்கா இஸ்ரேலுக்கு, ஆதரவாக உலகிலேயே மிகப்பெரிய போர் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்டு ஆர்.போர்ட் போர் கப்பலை அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் வலிமையான போர் ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களும் இதில் உள்ளன.

இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்
இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்

இதனால் இந்தப் போர் நீண்ட காலம் நீடிக்குமா என்ற கேள்வியும், அச்சமும் எழுந்துள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல், பாலஸ்தீனம், ஹமாஸ் , ஈரான், லெபனான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான போராக இது நீடிக்குமா என்ற கேள்வியும் அச்சமும் எழுந்துள்ளது. அப்படி நடந்தால் இதில் ரஷ்யா, சீனா இணையலாம்.

ஏற்கெனவே உக்ரைன் - ரஷ்ய போரில் உலக நாடுகள் பிரிந்து கிடக்கின்றன. அதனால் இந்த போரும் இணைந்து. இரண்டு போர்களும் சேர்ந்து இது மூன்றாம் உலகபோராக மாறுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in