காசாவை முற்றுகையிட்டிருக்கும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள், அந்த நகரை வடக்கு - தெற்கு என இரண்டாக பிரித்து தாக்கி வருகின்றன.
அக்.7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கொடூரத் தாக்குதல் நடத்தியதில் அனைத்து துயரங்களும் ஆரம்பித்தது. அந்த நிகழ்வில் இஸ்ரேலின் 1400 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக காசாவுக்கு கடத்திச் செல்லப்பட்டனர். இஸ்ரேல் தனது பதிலடியை தொடங்கியதில், காசாவை குறிவைத்து இன்று இரண்டாவது மாதமாக போர்த் தாக்குதல் தொடர்கிறது.
காசா தரப்பில் இது வரை 9,700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4000 குழந்தைகள் உட்பட பெரும்பாலானோர் அப்பாவிகள். வான்வழித் தாக்குதல்களை தொடர்ந்து கடந்த வாரம் தரை மார்க்கமாக இஸ்ரேலிய படைகள் காசாவுக்குள் நுழைய ஆயத்தமாயின.
காசாவை சுற்றி வளைத்திருக்கும் இஸ்ரேல் படைகள், வடக்கு - தெற்கு என காசாவை இரண்டாக பிரித்து தாக்குதல் தொடுத்து வருகின்றன. ஹமாஸ் அமைப்பினர் செயல்படும் வடக்கு காசாவில் தீவிரத் தாக்குதலும், அகதிகள் முகாம் மற்றும் மருத்துவமனைகளுக்காக பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள தெற்கு காசாவில் துல்லியத் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன.
காசாவில் ஒட்டுமொத்த தகவல்தொடர்பையும் முடக்கியிருக்கும் இஸ்ரேல், அடுத்த 24 மணி நேரத்தில் காசா வீதிகளில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து வேட்டையாடத் திட்டமிட்டிருக்கிறது. 80 மீ ஆழத்தில் பல கிமீ நீளும் சுரங்கப் பாதைகளில், தேவையான உணவு மற்றும் ஆயுதங்களுடன் பதுங்கியிருக்கும் ஹமாஸ் ஆயுதக் குழுவினரும் இஸ்ரேல் படைகளை நேருக்கு நேர் சந்திக்கத் தயாராக உள்ளனர். கடும் பதற்றம் சூழ்ந்துள்ள காசாவின் வீதிகள் ரத்தக்களரியாக இருக்கின்றன.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்