காசா முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது இஸ்ரேல்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

பாலஸ்தீனத்துக்கு உட்பட்ட காசா எல்லை முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தை சேர்ந்த புரட்சி இயக்கமான ஹமாஸ், சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீது திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இருதரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில்தான் சர்ச்சைக்குரிய காசா பகுதியை இஸ்ரேல் முற்றிலுமாக கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் உக்கிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்
காஸாவில் உக்கிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்

போர் உக்கிரமாக நடப்பதால் காசா முனையில் இருந்து இதுவரை 123,538 மக்கள் வெளியேறி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. வீடுகளை அழிப்பதாலும், பயம், பாதுகாப்பு குறித்த கவலை காரணமாகவும் அவர்கள் வெளியேறியிருப்பதாகவும், 73,000க்கும் அதிகமானோர் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. கூறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in