இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலையும் காசா
இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலையும் காசா

2 அணுகுண்டுகளுக்கு இணையான சேதம்... காசா மீது தொடரும் இஸ்ரேல் குண்டுவீச்சு!

ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளுக்கு இணையான சேதத்தை, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நிகழ்த்தியிருப்பதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

இரண்டாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய நிகழ்வாக, ஜப்பான் மீதான அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதல் அமைந்தது. ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய ஜப்பானிய நகரங்கள் மீது வீசப்பட்ட அணுகுண்டுகளுக்கு இணையான சேதம், தற்போதைய காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.

உருக்குலையும் காசா
உருக்குலையும் காசா

அக்.7 முதல் நவ.1 இடையிலான தாக்குதலில் மட்டும் காசா மீது 25 ஆயிரம் டன் அளவுக்கு வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது ஜப்பான் மீதான அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலுக்கு இணையானது என யூரோ மெட் என்ற மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அக்.7 - நவ.1 இடையே காசாவின் 12 ஆயிரம் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியுள்ளது. இது சமகால வரலாற்றில் மிகத் தீவிரமான தாக்குதல் என்றும் சொல்லப்படுகிறது. இஸ்ரேலிய படைகள் வடக்கு காசாவை குறிவைத்து ஸ்மார்ட் குண்டுகளை வீசிவந்த போதிலும், அப்பாவி பாலஸ்தீனியர்கள் அபயம் சேர்ந்திருக்கும் தெற்கு காசா மீதும் இஸ்ரேல் தாக்குதல் தொடுத்து வருகிறது.

உருக்குலையும் காசா
உருக்குலையும் காசா

மருத்துவமனைகள், அகதிகள் முகாம், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவையும் இஸ்ரேலின் குண்டுவீச்சிலிருந்து தப்பவில்லை. இஸ்ரேல் தொடுத்திருக்கும் போரின் நோக்கம் ஹமாஸ் அமைப்பினரை அழிப்பது என்றில்லாது, பாலஸ்தீன மக்களை காசாவிலிருந்து அப்புறப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. மீண்டும் அடுத்த தலைமுறைகள் அங்கே தழைக்க வாய்ப்பில்லாத வகையில், இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கும் ஆளாகி இருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!

வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐயப்பனுக்கு தங்க அங்கி..  சபரிமலையில் இன்று நடை திறப்பு!

ரூ.25,00,000 பரிசுத் தொகையை... தான் படித்த கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்த வீரமுத்துவேல்... குவியும் பாராட்டுக்கள்!

செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in