புதிய பதற்றம்... ஹமாஸ் ஊடுருவல் தாக்குதல்களால், ‘போருக்குத் தயார்...’ என இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அறிவிப்பு!

காஸாவிலிருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்படும் ராக்கெட்டுகள்
காஸாவிலிருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்படும் ராக்கெட்டுகள்

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் சார்பில் புதிய ராணுவ நடவடிக்கை அறிவிப்பானதை அடுத்து 'நாங்களும் போருக்கு தயார்' என இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் வெளிப்படையாக அறிவித்துள்ளன. இதனால் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மீண்டும் தீவிர போர் அபாயம் சூழ்ந்துள்ளது.

அக்.7, இன்றைய தினம் காலையில் பாலஸ்தீனிய போராளிகள் தெற்கு மற்றும் மத்திய இஸ்ரேல் பகுதிகளின் மீது திடீர் ஏசுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். மேலும் ஆயுதமேந்திய போராளிகள் பலர் எல்லை வேலியைக் கடந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு ஊடுருவி தாக்குதல் நடத்திய பாலஸ்தீன போராளிகளால் பலர் காயமடைந்திருப்பதாகவும், பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் தெரிவிக்கிறது. இதனை அடுத்தே இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் சார்பில் போருக்குத் தயார் என்ற அறிவிப்பு வெளியானது.

தாக்குதலின் முதல் ஒரு மணிநேரத்தில், டெல் அவிவிற்கு தெற்கே 10 மைல் தொலைவில் உள்ள ரிஷான் லெசியன் மற்றும் இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ரம்லா வரை ஏவுகணைகள் தாக்கி உள்ளன. இஸ்ரேல் தொலைக்காட்சிகளில் வெளியான சில புகைப்படங்கள், ஆயுதமேந்தியவர்கள் இஸ்ரேல் எல்லைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்துவதை சுட்டிக்காட்டின. ஆனால் அவை தற்போதைய தாக்குதல் தொடர்பானவையா என்பதை உறுதி செய்ய இயலவில்லை.

காஸாவிலிருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்படும் ராக்கெட் ஏவுகணைகளை கீழ்கண்ட வீடியோ சுட்டிக்காட்டுகிறது. ஹமாஸ் தனது முதல் தாக்குதலின் 20 நிமிடங்களில் சுமார் 5000 ராக்கெட்டுகளை ஏவியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.

ஹமாஸின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் , அக்ஸா மசூதியைப் பாதுகாப்பதற்கான ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் புதிய தாக்குதலை தொடங்கியது. ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் பாதசாரிகள், கார்கள் மற்றும் வீடுகள் மீதும் துப்பாக்கிச் சூடுகள் நிகழ்ந்துள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் சுட்டிக்காடுகின்றன.

போருக்கு நிகரான தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்ததை அடுத்து, ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவமனைகளில் சிறப்பு ரத்ததான முகாம் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் இந்த ஆண்டில், 247 பாலஸ்தீனியர்கள் 32 இஸ்ரேலியர் மற்றும் 2 வெளிநாட்டவர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in