130 சுரங்கப் பாதைகள் அழிப்பு! ஹமாஸை சுற்றி வளைக்க இஸ்ரேல் தரைப்படை வியூகம்!

காஸாவில் 130 சுரங்கப்பாதைகள் அழிப்பு
காஸாவில் 130 சுரங்கப்பாதைகள் அழிப்பு

காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் கட்டமைத்துள்ள விரிவான சுரங்கப் பாதைகளை அடையாளம் கண்டு இஸ்ரேல் படைகள் தரைவழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் இதுவரை 130 சுரங்கப் பாதைகள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரைப்படை அறிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது காஸா பகுதியில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியில் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.

ஹமாஸ் அமைப்பின் மீது போரை அறிவித்துள்ள இஸ்ரேல், காஸா பகுதியில் தொடர் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

சுரங்கப்பாதை வழித்தடங்களை அழிக்க இஸ்ரேல் வியூகம்
சுரங்கப்பாதை வழித்தடங்களை அழிக்க இஸ்ரேல் வியூகம்

குறிப்பாக காஸா பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது.

காஸாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள மையப் பகுதியில் இஸ்ரேல் படைகள் தீவிரமாக தரை வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹமாஸ் அமைப்பினர் கட்டமைத்துள்ள சுரங்க ப்பாதைகளை கண்டறிந்து தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்துள்ள இஸ்ரேல், பிணைக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை போர் நிறுத்தத்திற்கு உடன்பட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

காஸா-இஸ்ரேல் போரில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி
காஸா-இஸ்ரேல் போரில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி

ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதை வலை அமைப்பை அழிக்க, வெடிக்கும் சாதனங்களை பயன்படுத்தி வருவதாகவும், உட்கட்டமைப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றை அழிப்பதே இலக்கு எனவும் இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் டேனியல் ஹக்காரி தெரிவித்துள்ளார். போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வருவதால் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in