இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்...13 பணயக் கைதிகள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!

இஸ்ரேல் நடக்கும் தாக்குதல்
இஸ்ரேல் நடக்கும் தாக்குதல்

காஸாவில் பிடிபட்ட 13 பணயக்கைதிகள் உள்பட வெளிநாட்டினர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

வான்வழி தாக்குதல்
வான்வழி தாக்குதல்

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் போராளிக் குழுவின் ராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸ் இன்று தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிப்பிடாமல் இஸ்ரேலிய போர் விமானங்களால் 13 கைதிகள் கொல்லப்பட்டதாக அது கூறியுள்ளது.

அக்டோபர் 7-ம் தேதி நடந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து காஸாவில் 150 பேரை ஹமாஸ் போராளிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இதில் மூத்த இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகளும், வெளிநாட்டவர்களும் அடங்குவர். முன்னறிவிப்பின்றி காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டுகளை வீசினால் பிணைக் கைதிகளைக் கொன்றுவிடுவோம் என்று தீவிரவாதக்குழு மிரட்டல் விடுத்திருந்தது. தொடர்ந்து ஏழாவது நாளாக இன்றும் வன்முறை தொடர்ந்த நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நிலவும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000ஐ நெருங்கியுள்ளது.

தாக்குதலில் பற்றி எரியும் கட்டிடங்கள்.
தாக்குதலில் பற்றி எரியும் கட்டிடங்கள்.

ஹமாஸ் கொடூர தாக்குதலால் 1,300 இஸ்ரேலிய பொதுமக்கள் மறும் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ் தெரிவித்தார்.

அத்துடன் பயங்கரவாதத் தாக்குதலில் 3,391 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் காஸாவை வான்வழி மூலம் கொடூரமாக தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

நாளை மகாளய பட்ச அமாவாசை: இந்த விஷயங்களை மறக்காதீங்க!

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள்  அதிர்ச்சி!

இந்த வருஷம் கேம்பஸ் இன்டர்வியூ கிடையாது.. பிரபல ஐடி நிறுவனம் அறிவிப்பு!

செம மாஸ் அறிவிப்பு... இன்று மெட்ரோ ரயிலில் பயணிக்க கட்டணம் கிடையாது!

மனைவி தற்கொலை... விரக்தியில் உயிரையிழந்த கணவர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in