கொடூரம்... 19 பேரை கட்டிவைத்து வெட்டிக்கொன்ற தீவிரவாதிகள்!

டிஆர்காங்கோவில் 19 பேரை வெட்டிக்கொன்ற தீவிரவாதிகள்
டிஆர்காங்கோவில் 19 பேரை வெட்டிக்கொன்ற தீவிரவாதிகள்

ஜனநாயக குடியரசு காங்கோவில் 19 பேரை தீவிரவாதிகள் கட்டி வைத்து வெட்டிக்கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டிஆர்சி என்று அழைக்கப்படும் ஜனநாயக குடியரசு காங்கோ நாடு ஆபிரிக்காவில் அமைந்துள்ளது. இங்கு அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த ஜனநாயக படை என்ற பெயரில் ஒரு குழு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்த அமைப்பை கட்டுப்படுத்த டிஆர்சி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எதுவும் இதுவரை பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெனி என்ற ஊரில் புகுந்த ஏடிஎஃப் படையினர் அங்கிருந்த மக்களை துப்பாக்கி முனையில் ஒரே இடத்தில் கட்டி வைத்துள்ளனர்.

டிஆர்காங்கோவில் 19 பேரை வெட்டிக்கொன்ற தீவிரவாதிகள்
டிஆர்காங்கோவில் 19 பேரை வெட்டிக்கொன்ற தீவிரவாதிகள்

பின்னர் அவர்கள் அனைவரையும் தாங்கள் வைத்திருந்த கத்திகளால் வெட்டி கொலை செய்தனர். இந்த தகவலை உறுதி செய்துள்ள அந்நாட்டு ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் முசவுதி, இந்த சம்பவத்தில் மேலும் பலர் மாயமாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் இடமிருந்து தப்பி அண்டை நாடான உகாண்டாவிற்கு செல்ல அவர்கள் லாபியா ஆற்றில் குதித்திருக்கலாம் எனவும் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு இருந்ததால் அவர்கள் கரையேறி இருக்க வாய்ப்பு இல்லை எனவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

டிஆர்காங்கோவில் 19 பேரை வெட்டிக்கொன்ற தீவிரவாதிகள்
டிஆர்காங்கோவில் 19 பேரை வெட்டிக்கொன்ற தீவிரவாதிகள்

இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ள ஏடிஎஃப் அமைப்பு இஸ்லாமிக் ஸ்டேட் எனும் ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவான அமைப்பு என அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது மக்களை பாதுகாக்கும் பொருட்டு ராணுவம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் இந்த படை மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும் எனவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 25ம் தேதியும் இதே போல், 26 பேரை ஓய்ச்சா கிராமத்தில் கத்தியால் வெட்டி ஏடிஎஃப் அமைப்பினர் படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in