
ஈரானில் ஹிஜாப் அணியாமல் ரயிலில் பயணித்ததால் தாக்குதலுக்கு உள்ளான சிறுமி கோமாவில் இருந்து வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளது அந்நாட்டில் பெண்ணிய அமைப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரானில் பொது இடங்களுக்கு வரும் பெண்கள், ஹிஜாப் அணிய வேண்டும் என்கிற சட்டம் அமலில் உள்ளது. இதற்கு அந்நாட்டில் வசித்து வரும் பெண்ணிய அமைப்பினர் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அவ்வப்போது ஹிஜாப் அணியாமல் வெளியே வரும் பெண்கள் மீது தாக்குதல்கள் நடைபெறுவது வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது.
குறிப்பாக கடந்த ஆண்டு 22 வயது மக்ஷா அம்மினி என்பவர் ஹிஜாப் அணியாததால், காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 1ம் தேதி தலைநகர் டெஹ்ரானில், ரயிலில் ஹிஜாப் இன்றி பயணிக்க முயன்ற ஆர்மிதா ஜெராவண்ட் என்ற 16 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் படுகாயமடைந்தார்.
ரயிலில் அவர் மீது தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என அஞ்சபட்ட நிலையில், படுகாயம் அடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோது, அவர் கோமா நிலைக்கு சென்றிருந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தகவலை வெளியிட்டுள்ள அந்நாட்டு அரசு ஊடகம், அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக எவ்வித தகவலையும் வெளியிடவில்லை. இதனிடையே தொலைக்காட்சியில் தோன்றிய சிறுமியின் பெற்றோர், தங்கள் மகள் தலையில் அடிபட்டதால் உயிரிழந்திருக்கலாம் என்று மட்டும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சிறுமியின் மறைவிற்கு ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண்ணியவாதிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று சந்திர கிரகணம்... 8 மணி நேரம் தோஷம்... இரவு சாப்பிடக் கூடாதா?
வரலாற்று சாதனை... ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை வென்றது இந்தியா!
அதிர்ச்சி... கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; சிக்கியது கடிதம்!
தீபாவளி பண்டிகைக்கு 10,975 சிறப்புப் பேருந்துகள்...நவம்பர் 9 முதல் இயக்கப்படுகிறது!
கெளதம் மேனனுடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் வீடியோ!