பகீர்... அட்டைப்பெட்டிக்கு பதில் சிக்கிய ஊழியரை நசுக்கிய ரோபோ!

தானியங்கி ரோபோட்
தானியங்கி ரோபோட்

தென்கொரியாவில் ஏற்றுமதி மையம் ஒன்றில், பணியை எளிதாக்க ஈடுபடுத்தப்பட்ட ரோபோ ஒன்றின் தவறால், அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவின் தெற்கு கியாங்சாங் மாகாணத்தில் வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் இருந்து தென்கொரியாவின் பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விவசாய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தில், வேளாண் பொருட்களான காய்கறிளைக் கழுவுவது, பின் அவற்றை பெட்டிக்குள் அடைப்பது, அந்த பெட்டிகளை ஏற்றுமதிக்கு தயார் செய்வது உள்ளிட்ட பணிகளை மனிதர்களுடன் இணைந்து தானியங்கி ரோபோக்களும் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன் தினம், இந்த நிறுவனத்தில் குடை மிளகாய் அடைக்கப்பட்ட பெட்டிகளை, ரோபோ ஒன்று ட்ரேயில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தது. அதன் பணிகளை 40 வயது மதிக்கத்தக்க ஊழியர் ஒருவர் கண்காணித்து வந்தார். அப்போது ரோபோவில் திடீரென கோளாறு ஏற்பட்டு, பெட்டிக்கு பதிலாக அருகே நின்று கொண்டிருந்த ஊழியரை தூக்கி போட்டது. இதில், இந்த ரோபோட்டின் கைகள் போன்ற பகுதி இறுக்கமாகப் பிடித்ததில், ஊழியரின் தலை நசுக்கப்பட்டு அவர் படுகாயமடைந்தார். இதனை கண்ட சக ஊழியர்கள், காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதே போன்று கடந்த மார்ச் மாதம் ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியரை தானியங்கி ரோபோட் ஒன்று தூக்கி வீசியதில் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்!  முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!

ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி

தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in