
மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே மோதல் முற்றியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கப்போவதாக கூறி இஸ்ரேல் போரை அறிவித்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியே பெரும் பதற்றத்துடன் உள்ளது.
இந்நிலையில், ஹமாஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்திய ஹேக்கர்கள் அந்த இணைய பக்கத்தை ஹேக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஸாவை மையமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஹமாஸின் இணையதளம் இந்திய ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்டு, அகற்றப்பட்டுள்ளதாக பல்வேறு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இஸ்லாமிய ஹேக்கிங் குழுக்கள் இஸ்ரேலின் தேசிய மின்சார ஆணையத்தின் இணையதளத்தையும் கணக்காளர் ஜெனரலின் இணையதளத்தையும் ஹேக் செய்ய முயற்சித்ததாகவும், ஆனால் இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு கடுமையாக இருந்ததால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய ஹேக்கர்கள் ஹமாஸின் இணையபக்கத்தை ஹேக் செய்து முடக்கியுள்ளனர்.