இஸ்ரேல் போர்... பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு!

இஸ்ரேல் மீதான தாக்குதல்
இஸ்ரேல் மீதான தாக்குதல்

காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் அதிகரித்துள்ள நிலையில், பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கான அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, காஸா பகுதியில் இஸ்ரேலின் பதிலடியில் 2,500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினர், பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பாலஸ்தீனத்திலிருக்கும் இந்தியர்களுக்கு, அவசர கால உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தாக்குதலில் இடிந்து கிடக்கும் கட்டடங்கள்.
தாக்குதலில் இடிந்து கிடக்கும் கட்டடங்கள்.

பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கான பிரதிநிதிகள் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியர்கள் அவசர உதவி தேவைப்பட்டால் 0592-916-418 என்ற தொலைபேசி எண்ணிலும், +970-592916418 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், அலுவலக எண்களும் மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தொலைபேசி எண் 00970-2-2903033/4/6 என்ற எண்ணிலும், rep.ramallah@mea.gov.in மற்றும் hoc.ramallah@mea.gov.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!

உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in