உக்கிரமடையும் தாக்குதல்... இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!

இஸ்ரேலை நோக்கி  ராக்கெட் தாக்குதல்
இஸ்ரேலை நோக்கி ராக்கெட் தாக்குதல்

இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் - ஹமாஸ் போராளிகள் இடையிலான மோதல் காரணமாக, இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது.

பாலஸ்தீன போராளிகளான ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் எல்லைக்குள் இன்று காலை முதல் திடீர் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் எல்லை நெடுக இஸ்ரேல் ராணுவத்தினர் பதில் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றுக்கு அப்பால், காஸாவிலிருந்து ஏவப்படும் ஆயிரக்கணக்கிலான ஏவுகணைகளால் இஸ்ரேல் எல்லைக்குள்ளும் பதற்றம் சூழ்ந்துள்ளது.

மோதல் ஆரம்பித்த 20 நிமிடங்களில் ஆயிரக்கணக்கிலான ராக்கெட்டுகளை இஸ்ரேல் எல்லைக்குள் ஏவி ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது. இஸ்ரேல் தரப்பில் 5000 என்றும், சர்வதேச ஊடகங்கள் சார்பில் 2000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் எனவும் கணக்கு சொல்கிறார்கள். இந்த திடீர் தாக்குதல் காரணமாக இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் போருக்குத் தயார் என அறிவித்ததோடு, பதிலடி மற்றும் நேரடி மோதல்களை தொடங்கியுள்ளனர்.

இதனால் குடிமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் இந்தியா கவலை கொண்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேலுக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இஸ்ரேலில் எழுந்துள்ள அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகள் அளிக்கும் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுமாறும்’ அந்த அறிவிப்பில் தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும், ’மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும், தேவையற்ற வகையில் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும்’ அந்த அறிவிப்பில் மேலும் கோரப்பட்டுள்ளது. இதற்கிடையே தரை, வான், நீர் என சகல உபாயங்களிலும் ஊடுருவும் ஹமாஸ் போராளிகளால் இஸ்ரேல் எல்லைக்குள் தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in