இந்தியா ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக வேண்டும்; பிரிட்டன் ஆதரவு!

ரிஷி சுனக்- மோடி
ரிஷி சுனக்- மோடி

இந்தியா ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்று பிரிட்டன் ஆதரவு தெரிவித்து உள்ளது. பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளும் இந்த கவுன்சிலில் இடம்பெற பிரிட்டன் விருப்பம் தெரிவித்துள்ளது.

நியூயார்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா.வின் வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரிட்டன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என கூறினார்.

பிரிட்டன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி
பிரிட்டன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி

அவர் தொடக்க உரையாக பேசும்போது, “உலகம் நமக்கு முன் வைத்துள்ள சவால்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆனால், நேர்மறையான வளர்ச்சி காண்பதற்கான வாய்ப்பும் நம்மிடம் உள்ளது. நீடித்த வளர்ச்சி இலக்குகளை நாம் மீண்டும் அடைவதற்கான வாய்ப்பும் நமக்கு உள்ளது. இதற்கு பொருள் என்னவெனில், நம்முடைய பாரம்பரிய நண்பர்கள் மற்றும் கூட்டணி நாடுகளுடன் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆனால், உலகில் எழுச்சி பெற்று வரும் சக்தி படைத்த நாடுகளுக்கும் நாம் குரல் கொடுக்க வேண்டும்” என கூறினார்.

ஐ.நா.
ஐ.நா.hindu கோப்பு படம்

மேலும், “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என பிரிட்டன் ஊக்குவித்து வருகிறது. இதன்படி, இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர்களாக வேண்டும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். உலக அரங்கில் ஓர் உயர்ந்த குரலாக இடம்பெற உண்மையில் ஆப்பிரிக்காவும் தகுதி வாய்ந்தது” என அவர் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in