உஷார்... இந்தியர்களை தரைமார்க்கமாக வெளியேற சொல்லி மத்திய அரசு அவசர உத்தரவு!

நைஜர் தேசத்தில்...
நைஜர் தேசத்தில்...

மக்களாட்சியை கவிழ்த்து மீண்டு ராணுவம் ஆட்சியில் அமர்ந்த நைஜர் தேசத்திலிருந்து, இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க தேசமான நைஜரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. அதிபர் முகமது பாசும் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து மீண்டும் அங்கே ராணுவத் தலைமை பொறுப்பேற்றுள்ளது.

இதற்கு எதிராக ஐநா அமைப்பு முதல் அமெரிக்கா வரை கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் ‘இது எங்கள் உள்நாட்டு விவகாரம். இதில் உலக நாடுகள் தலையிட அவசியமில்லை’ என நைஜர் ராணுவத் தலைமை பதிலடி தந்திருக்கிறது. இங்கு கடந்த 3 ஆண்டுகளில் ஏழாவது முறையாக ராணுவம் மேற்கொள்ளும் அத்துமீறல் நடவடிக்கை என்பதால், நைஜர் மக்கள் இவற்றை சாதாரணமாக கடந்து செல்கின்றனர்.

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட நைஜர் ராணுவத் தலைமையினர்
ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட நைஜர் ராணுவத் தலைமையினர்

நைஜரில் இருக்கும் தங்கள் குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு பல்வேறு வெளிநாடுகளும் உத்தரவிட்டு வருகின்றன. அவற்றின் மத்தியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், நைஜரிலிருந்து இந்தியர்கள் வெளியேறுமாறு தெரிவித்துள்ளது. நைஜர் தேசத்தின் வான் எல்லைகள் மூடப்பட்டிருப்பதால், தரை மார்க்கமாக இந்தியர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நைஜரில் நிலைகொண்டிருக்கும் அதன் முன்னாள் காலனியாதிக்க நாடான பிரான்ஸின் படைகள், நாட்டின் மற்றொரு மூலையில் பயிற்சி முகாம்களை அமைத்திருக்கும் அல்கொய்தா அமைப்பு, அந்நாட்டில் அபரிமிதமாக கிடைக்கும் யுரேனியம் கதிரியக்கத் தனிமத்துக்காக நோட்டமிடும் கடத்தல்காரர்கள் என பல்வேறு திசைகளில், அசாதாரண சூழலுக்கான வாய்ப்புகள் அங்கே அதிகரித்திருப்பது குறிப்பிடத்தகக்து.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in