ஆடு புலி ஆட்டம் ஆடும் இம்ரான் கான்!

ஆடு புலி ஆட்டம் ஆடும் இம்ரான் கான்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்தும் நோக்கில் அந்நாட்டு நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இம்ரான் கான் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. அதன் மீது வாக்கெடுப்பு நடத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று கூடியது. இன்றைய நாடாளுமன்ற நிகழ்ச்சிகளில் 4-வது நிகழ்ச்சியாக வாக்கெடுப்பு பட்டியலிடப்பட்டிருந்தது.

நாடாளுமன்றம் கூடியதும் பேசிய சபாநாயகர் ஆசாத் கெய்சர், பிரதமர் இம்ரான் கானை பதவியில் இருந்து வெளியேற்ற வெளிநாட்டு சதி உள்ளதா என்பது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்துப் பேசிய எதிர்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும் பாகிஸ்தானின் அரசியல் சாசனம் மற்றும் சட்டத்திற்கு சபாநாயகர் மதிப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து பேசிய வெளியுறவு அமைச்சர் ஷா மமூத் குரேஷி, எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை தங்கள் அரசு தோற்கடிக்கும் என குறிப்பிட்டார். இதையடுத்து, அவை நண்பகல் 12.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த சில எம்பிக்கள் அவைக்கு வரவில்லை. இம்ரான் கானின் இந்த ஆடு புலி ஆட்டம் பின்னர்தான் தெரியவந்தது. இரவு 8 மணிக்கு மேல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் அறிவித்தார். இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த துணை சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in