187 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துபோன உடும்பு இனம்; மீண்டும் இனப்பெருக்கம் செய்கிறது: ஈக்வடாரில் அதிசயம்

187 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துபோன உடும்பு இனம்; மீண்டும் இனப்பெருக்கம் செய்கிறது: ஈக்வடாரில் அதிசயம்

187 ஆண்டுகளுக்கு முன்னர் கலபகோஸ் தீவுகளில் இருந்து காணாமல் போன நில உடும்பு இனம் தற்போது அங்கு இயற்கையாக இனப்பெருக்கம் செய்து வருவதாக ஈக்வடார் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கலிபோர்னியா அகாடமி ஆஃப் சயின்சஸ் 1903-06 -ம் ஆண்டுகளில் சாண்டியாகோ தீவில் நடத்திய ஆய்வுகளின்படி, தீவில் உள்ள மூன்றில் ஒன்றான கோனோலோபஸ் சப்கிரிஸ்டேடஸ் இனத்தைச் சேர்ந்த நில உடும்பு 20 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே அங்கிருந்து முற்றிலுமாக அழிந்துபோனது தெரியவந்தது.

இத்தகைய சூழலில் பசிபிக் தீவுக்கூட்டத்தின் இயற்கை சூழலை புதுப்பிக்க, கலபகோஸ் தேசிய பூங்கா (PNG) அதிகாரிகள் 2019-ம் ஆண்டில் அருகிலுள்ள தீவில் இருந்து 3,000 க்கும் மேற்பட்ட உடும்புகளை மீண்டும் அங்கே அறிமுகப்படுத்தினர்.

பிரிட்டிஷ் புவியியலாளரும் இயற்கை ஆர்வலருமான சார்லஸ் டார்வின், ஈக்வடாரில் உள்ள தீவு சங்கிலியில் தனது பரிணாம ஆய்வுகளை மேற்கொண்டார், இது அவரை உலக அளவில் புகழ் பெற உதவியது. டார்வின் 1835-ம் ஆண்டில் சாண்டியாகோவில் அனைத்து வகைகளையும் உள்ளடக்கிய உடும்புகள் அதிகளவில் இருப்பதை தெரிவித்தார். அதன்பின்னர் எப்படியோ நில உடும்பு வகை கலபகோஸ் தீவில் இருந்து அழிந்துபோனது.

இது குறித்து பேசிய கலபகோஸ் தேசிய பூங்காவின் இயக்குநர் டேனி ரூடா, "187 ஆண்டுகளுக்குப் பிறகு, மூத்த வயதுடைய, இளம் வயதுடைய மற்றும் புதிதாகப் பிறந்த நில உடும்புகள் இந்த தீவில் இப்போது அதிகளவில் இருப்பதை நாங்கள் மீண்டும் பார்க்கிறோம். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த தீவுகளை மீட்டெடுப்பதற்கான எங்கள் நம்பிக்கையை மேம்படுத்துகிறது. இது ஒரு அற்புதமான சாதனையாகும்" என்று கூறினார்.

ஈக்வடார் கடற்கரையிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலபகோஸ் தீவுகள், அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் தாயகமாகவும், இயற்கை உலக பாரம்பரிய தளமாகவும் உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in