
ஓபன்ஏஐ நிறுவனத்தின் 500 ஊழியர்கள், அந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட சாம் ஆல்ட்மேனை மீண்டும் பணிக்கு கொண்டுவராவிட்டால் தாங்கள் பணியிலிருந்து விலகவுள்ளதாக நிர்வாகத்தை எச்சரித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு துறையின் பாய்ச்சலுக்கு வித்திட்ட சாட்ஜிபிடி செயலியை உருவாக்கிய நிறுவனம், ஓபன்ஏஐ. இதன் துணை நிறுவனரான சாம் ஆல்ட்மேன் தலைமை நிர்வாகப் பொறுப்பில் இருந்து வந்தார். இந்த சூழலில், கடந்த நவ.18-ம் தேதி சாம் ஆல்ட்மேனை, இந்த நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் தகுதி இப்போது அவருக்கு இல்லை எனக் காரணம் காட்டி நிறுவனத்திலிருந்து வெளியேற்றியது ஓபன்ஏஐ நிர்வாகம்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் உள்பட 490 ஊழியர்கள் கையெழுத்திட்டு நிர்வாகக் குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில், இயக்குனர் குழு ஒட்டுமொத்தமாக பதவி விலக வேண்டும் எனவும் அந்தப் பொறுப்பில் தகுதியுடைய நபர்கள் நியமிக்கப்படவும் மேலும், சாம் ஆல்ட்மேன் மீண்டும் தலைமை நிர்வாகப் பொறுப்பில் அனுமதிக்கப்படவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நடக்காவிட்டால், இந்நிறுவனத்தில் இருந்து விலகி மைக்ரோசாஃப்ட் நிறுவனம், சாம் ஆல்ட்மேன் தலைமையில் உருவாக்கும் குழுவில் அனைவரும் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சாம் ஆல்ட்மேனையும் கிரெக் ப்ரோக்மேனையும் நீக்கியதன் மூலம் நீங்கள் (நிர்வாகக் குழு) இந்த வேலைகளை முடக்கியதுடன் இந்நிறுவனத்தையும் அதன் இலக்கையும் குறைவாக மதிப்பிட்டுள்ளீர்கள். ஓபன்ஏஐயை மேற்பார்வையிடும் திறன் உங்களுக்கு இல்லை" என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ப்பா... கிளாமரில் தெறிக்க விட்ட தமன்னா
நெகிழ்ச்சி... சாவிலும் இணைபிரியாத அக்கா, தம்பி!
அடுத்த சர்ச்சை... தேசிய கீதத்தை அவமானப்படுத்திய மன்சூர் அலிகான்!
மன்சூர் அலிகான் தப்புன்னா... ரஜினி பேசுனதும் தப்பு தான்!
அடாவடி வசூல்... கழிவறை கட்டண குத்தகைதாரருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பு!