வணிகத்தை நிறுத்தியது ஐபிஎம்: ரஷ்யாவுக்கு மேலும் நெருக்கடி

வணிகத்தை நிறுத்தியது ஐபிஎம்: ரஷ்யாவுக்கு மேலும் நெருக்கடி

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், ரஷ்யாவில் தங்களது வணிக நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது ஐ.பி.எம். நிறுவனம். இதனால் மேலும் ஒரு நெருக்கடியை ரஷ்யா சந்தித்துள்ளது.

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்ற ஒன்றை காரணத்தை கூறி அந்நாட்டின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வந்தாலும், ரஷ்யா காதுகொடுத்து கேட்டப்பாடில்லை.

இதனிடையே, ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு தடைகளை உலக நாடுகள் விதித்து வருகின்றன. விசா, மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷ்யாவில் தங்களுடையை சேவையை நிறுத்திவிட்டன. இதனால், பொதுமக்கள் இந்த கார்டுகளை பயன்படுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரஷ்யா, பெலாரஸில் தனது செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படி பல்வேறு நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் ரஷ்யாவில் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தி உள்ளதாக அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம். அறிவித்துள்ளது. முன்னணி அமெரிக்க கணினி உற்பத்தியாளரான ஐ.பி.எம்., அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் சந்தையின் பெரும் பங்கைக் கொண்டுள்ளது. இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ள ஆர்மோங்கில் உள்ளது. இப்படி பல நிறுவனங்கள், நாடுகள் தொடர்ந்து தடை விதித்து வருவதால் ரஷ்யா கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in