தேசத்தைக் காப்பாற்ற என்னால் முடியாது... சர்வதேச உதவி வேண்டும்: ரணில் விக்ரமசிங்கே புலம்பல்!

தேசத்தைக் காப்பாற்ற என்னால் முடியாது... சர்வதேச உதவி வேண்டும்: ரணில் விக்ரமசிங்கே புலம்பல்!

"தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காகவே பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளேன். இதனை என்னால் தனியாக செய்ய முடியாது. சர்வதேச உதவி வேண்டும்" என்று இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தேசத்தைக் காப்பாற்றவும், எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வேண்டும். அதே வேளையில் இந்த நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன்" என அவர் கூறினார்.

"ஆனால், இதனை என்னால் தனியாக செய்ய முடியாது. எனவே, எனக்கு சர்வதேச உதவி தேவை. தேசத்தைக் காப்பாற்ற நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவும் நான் உத்தேசித்துள்ளேன் " என்று ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.