'நான் மிகவும் ஆபத்தானவன்' - கர்ஜிக்கும் இம்ரான் கான்

இம்ரான் கான்
இம்ரான் கான்

பயங்கரவாத வழக்கை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், "நான் மிகவும் ஆபத்தானவன்" என்று ஆளும் ஷெபாஸ் ஷெரிஃப் அரசை கடுமையாக எச்சரித்துள்ளார்.

கடந்த வாரம் அரசுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் இஸ்லாமாபாத் காவல்துறையின் கூடுதல் அமர்வு நீதிபதி மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளை மிரட்டியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பயங்கரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் இம்ரான் கான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வருகிறது. இந்த வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் இம்ரான் கானுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி வரை முன் ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,

"நான் மிகவும் ஆபத்தானவன். ஆளும் அரசாங்கத்தினர் மிகப்பெரிய கட்சியின் தலைவரைக் கைது செய்ய முயற்சிக்கிறார்கள். பாகிஸ்தான் நாடு இப்போது உலகம் முழுவதும் கேலிக்குரிய பொருளாக மாறியுள்ளது. முடிவுகளை எடுப்பவர்கள் அல்லது அவற்றை இறுதி செய்பவர்கள் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும்”என்று கூறினார். தற்போதைய பதற்றமான சூழ்நிலை குறித்து இம்ரான் கான் ஆவேசமாக கருத்து தெரிவித்தாலும், செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பதைத் தவிர்த்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in