மனைவியைக் கொலை செய்த கணவர்: கையை அறுத்துக் கொண்டு மாடியில் இருந்து குதித்தார்

மனைவியைக் கொலை செய்த கணவர்: கையை அறுத்துக் கொண்டு மாடியில் இருந்து குதித்தார்

குடும்ப தகராறில் தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர், தனது கையை அறுத்துக் கொண்டு மாடியில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள கொழும்பு சர்பன்டைன் வீதி அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை 32 வயதான பெண் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாயான அந்த பெண்ணைக் கொலை செய்த அவரது கணவர், தனது கையைக் கத்தியால் அறுத்துக் கொண்டார். அத்துடன் முதல் மாடியில் இருந்து குதித்தார். இதனால் அவர் படுகாயமடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து போலீஸார் கூறுகையில்," குடும்ப தகராறு காரணமாக இன்று அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொலை செய்த அவரது கணவர், தனது கையையும் அறுத்துக் கொண்டு மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எதற்காக மனைவியைக் கொலை செய்து விட்டு அவர் தற்கொலை செய்ய முயற்சி செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர். கணவனால் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in