அடுத்த அதிர்ச்சி! ஒரு நாள் மட்டும் கணவன், மனைவி! சீனாவில் ட்ரெண்டாகும் புது கலாசாரம்!

அடுத்த அதிர்ச்சி! ஒரு நாள் மட்டும் கணவன், மனைவி! சீனாவில் ட்ரெண்டாகும் புது கலாசாரம்!

உணவு விஷயங்களில் மட்டுமல்லாமல் பல விநோத நடைமுறைகளுக்கு முன்னோடியாக சீனா இருந்து வருகிறது. அந்த வகையில் ஒருநாள் திருமணம் எனும் புது வகையான கலாசார முறை தற்போது சீனாவில் ட்ரெண்டாகி வருகிறது.

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் இருக்கும் கிராமங்களில் ஒருநாள் திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு காரணம் அங்கு கடைபிடிக்கப்படும் நடைமுறை தான். அதாவது, ஏழ்மை காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஆண்கள், திடீரென உயிரிழந்தால் அவர்களின் குடும்ப கல்லறையில் அவர்களின் சடலங்களைப் புதைக்க மாட்டார்கள். 

இதனால் அவர்களால் மூதாதையருடன் சொர்க்கத்தில் சேர முடியாது என்கிற நம்பிக்கை இருந்து வருகிறது. இந்த பாவம் பல தலைமுறைகளுக்கும் தொடரும் என்று அந்நாட்டு மக்கள் நம்புகிறார்கள். இதன் காரணமாக, இறந்த பின்பும் தங்கள் மூதாதையருடன் ஒன்று சேர வேண்டும் என்றால் அனைத்து ஆண்களுக்கும் கட்டாயம் திருமணமாகி இருக்க வேண்டும்.

இம்முறையில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், தங்களுக்கு திருமணம் நடந்து விட்டதை மூதாதையர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அவர்களின் குடும்ப கல்லறைக்கு செல்வார்கள். உள்ளூர் பெண்கள் இப்படி ஒருநாள் திருமணம் செய்ய தயங்குவதால், வெளியூரில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்கள் பணத்திற்காக வந்து திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று கூறுகிறார் அந்த பகுதியில் இருக்கும் திருமண தரகர் ஒருவர்.

மேலும், திருமணமான பல பெண்களும் அவர்களின் குடும்பத்தினருக்கே தெரியாமல் இது போன்ற ஒருநாள் திருமணங்களை செய்து வருகிறார்கள். இந்த திருமணங்கள் எதுவுமே சட்டப்பூர்வமானவை அல்ல, வெறும் சடங்கிற்காக மட்டுமே செய்யப்படுகின்றன. திருமணம் முடிந்த மறுநாள் நீ யாரோ, நான் யாரோ என பிரிந்து சென்று விடுவார்கள் என்கிறார் அவர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in