6 ஆயிரம் பணியாளர்கள் நீக்கம்: ஹெச்பி நிறுவனம் தயார்

6 ஆயிரம் பணியாளர்கள் நீக்கம்: ஹெச்பி நிறுவனம் தயார்

பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் பெருநிறுவனங்களின் பட்டியலில் சேரத் தயாராகிறது ஹெச்பி. கணினி மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தியில் முன்னனியில் இருக்கும் இந்த பன்னாட்டு நிறுவனம் சுமார் 12% ஊழியர்களை பணியிலிருந்து நீக்க இருக்கிறது.

சர்வதேச அளவிலான பொருளாதார சுணக்கத்தை காரணமாக்கி பணியாளர்களை நீக்கும் போக்கில் டெக் நிறுவனங்கள் மும்முரம் காட்டுகின்றன. கரோனா பாதிப்பிலிருந்து விடுபடாத சர்வதேச பொருளாதாரம், போர்ச் சூழல், எரிபொருள் விலையேற்றம், தொழில்துறைகள் நசிவு, மக்களின் வாங்கும் திறன் குறைந்தது, நிறுவனங்களின் சீரமைப்பு முயற்சிகள் என பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் சொல்லப்படுகின்றன.

ட்விட்டர், மெட்டா, மைக்ரோசாஃப்ட், அமேசான் என தொடரும் அதிரடியில் அண்மை வரவு ஹெச்பி! தனிப்பட்ட நுகர்வோர் மற்றும் வணிக உபயோகங்களுக்கான கணினி தேவை குறைந்து வருவதால், அவற்றின் விற்பனை மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகள் தள்ளாட்டம் கண்டிருப்பதை இந்த பணி நீக்கத்தின் பின்னணியாக ஹெச்பி நிறுவனம் சுட்டுகிறது. இந்த வகையில் லாபத்தில் அடிவாங்கத் தொடங்கியிருக்கும் ஹெச்பி இழப்பை சரிகட்டும் வகையிலும், உபரிகளை நிரவும் நோக்கிலும் சுமார் 6 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தேசித்திருக்கிறது.

சர்வதேச அளவில் 50 ஆயிரம் ஊழியர்களை நிர்வகிக்கும் ஹெச்பி, 2025க்குள் இந்த பணிநீக்கங்களை படிப்படியாக நிறைவேற்றும். ஹெச்பி நிறுவனத்தின் இந்த முடிவை பிரபல ’சிப்’ தயாரிப்பு நிறுவனமான இன்டெல் வழிமொழிந்திருக்கிறது. விற்பனை சந்தையில் அதிகரித்திருக்கும் போட்டி மற்றும் குறையும் தேவை உள்ளிட்ட காரணங்களால் சுமார் 20% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உத்தேசித்துள்ளது. சர்வதேச அளவில் 1.14 லட்சம் ஊழியர்களை கொண்ட இன்டெல் நிறுவனத்தின் இந்த முடிவு நடைமுறைக்கு வரும்போது சுமார் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியிழப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாவார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in