உக்ரைன் போரில் காயமடைந்த குழந்தைகளுக்கு ஹாலிவுட் நடிகை ஆறுதல்!

உக்ரைன் போரில் காயமடைந்த குழந்தைகளுக்கு ஹாலிவுட் நடிகை ஆறுதல்!

உக்ரைன் போரில் காயமடைந்த சிறுவர், சிறுமிகளை ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி சந்தித்து ஆறுதல் கூறினார்.

உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்ற போரால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உக்ரைனில் போர் பாதித்த பகுதிகளுக்கு ஹாவுலிட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இன்று திடீரென பயணம் செய்தார். ஐக்கிய நாடுகள் சபையின் புலம் பெயர் மக்கள் பிரிவின் சிறப்பு தூதராக உள்ள ஏஞ்சலினா, போரால் காயமடைந்த குழந்தைகளைச் சந்தித்தார்.

மேலும் உக்ரைனில் உள்ள லிவிப் நகரில் தஞ்சமடைந்துள்ள இடம் பெயர்ந்த மக்களுடன் நடிகை ஏஞ்சலினா ஜோலி பேசினார். போரால் பாதிக்கப்பட்டட அவர்களிடம் நிலைமைகளை கேட்டறிந்தார். அவருடன் குழந்தைகள் பலர் ஃசெல்பி எடுத்துக் கொண்டனர். இதுகுறித்து ஏஞ்சலினா கூறுகையில்," குழந்தைகள் சந்திக்கும் வலியை நான் உணர்கிறேன். யாராவது அவர்களைத் தேற்றினால் அது அவர்களுக்கு மேம்பட்ட உணர்வை தரும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in