ஆண்மைக்குறைவு முதல் புற்றுநோய் சிகிச்சை வரை... தங்கத்தை விட அதிக விலையில் விற்பனையாகும் மூலிகை!

ஆண்மைக்குறைவுக்கு நிவாரணமளிக்கும் கீடா ஜதி மூலிகை
ஆண்மைக்குறைவுக்கு நிவாரணமளிக்கும் கீடா ஜதி மூலிகை

இமயமலையில் விளையும் ’கீடா ஜதி’ என்னும் அரிய மூலிகை, அதன் அளப்பரிய மருத்துவப் பலன்களுக்காக உலகில் அதிக விலையில் விற்பனையாகும் இயற்கை மருந்துப் பொருளாக பாவிக்கப்படுகிறது.

இயற்கையின் பொக்கிஷமாக கருதப்படுகிற இமயமலையில் பொதிந்திருக்கும் ஏராளமான அதிசயங்களில் ஒன்று கீடா ஜதி என்னும் மூலிகை. இந்த மூலிகை கிலோ விலை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுவதில் இருந்தே, இந்த மூலிகையின் அருமை பெருமைகளை அறியலாம்.

குறிப்பாக ஆண்மைக் குறைவுக்கு பயனளிக்கும் இயற்கை மூலிகையாக பல்வேறு நாடுகளிலும் கீடா ஜதி பயன்படுத்தப்படுகிறது. இது தவிர்த்து கல்லீரல் நோய்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சையிலும் இயற்கை மருத்துவர்களால் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. அரிய மூலிகை என்றபோதும் வழக்கமான உணவின் அங்கமாகவே இதனை உட்கொள்ளலாம். டீ, சூப் போன்று தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தினால் போதும் என்கிறார்கள். ஆண்மைக்குறைவுக்கு பக்கவிளைவற்ற நிவாரணங்களை வழங்குவதால் இதற்கு ’இமயமலை வயாகரா’ என்ற செல்லப்பெயரும் உண்டு.

கீடா ஜதி
கீடா ஜதி

மேற்படி சிகிச்சைகள் மட்டுமன்றி சத்து அளிப்பதாகவும், சர்வயோக நிவாரணியாகவும் கீடா ஜதியை பயன்படுத்துகிறார்கள். இது பூடான், இந்தியா, சீனா மற்றும் நேபாளம் ஆகிய தேசங்களில், இமயமலை சாரல் பகுதிகளில் செழித்து வளர்கிறது. இமயமலையின் 3,300 மீட்டர் முதல் 4,500 மீட்டர் வரையிலான உயரங்களில், குறிப்பிட்ட தருணங்களில் பனி உருகும்போது மறைந்திருந்து வெளிப்படும் பொக்கிஷமாக கீடா ஜதி காணக்கிடைக்கிறது.

ஒருவகை பூஞ்சை தொற்றுக்கு ஆளாவதன் மூலம் சாதாரண செடி என்பதிலிருந்து, அற்புத குணமளிக்கும் மூலிகையாக கீடா ஜதி மாறுகிறது. இமயமலைச் சாரலில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாகவும் இந்த மூலிகை சேகரிப்பு விளங்கி வருகிறது. இது தவிர்த்து சீனாவின் எல்லை தாண்டிய ஊடுருவலுக்கு இந்த மூலிகைக்கான தேவையும் முக்கிய காரணியாக சொல்லப்படுகிறது.

சீன மருத்துவத்தில் கீடா ஜதிக்கு முக்கிய இடமுண்டு. ஆண்மைக்குறைவு, கல்லீரல் உபாதைகள் எக்காரணத்திலும் நீடிக்கும் உடல் உபாதைகள் என்பதால், வரும் காலத்தில் கீடா ஜதிக்கு சந்தை மதிப்பு வெகுவாய் உயரவே வாய்ப்பிருக்கிறது. புற்றுநோய் சிகிச்சையிலும் கீடா ஜதிக்கு முக்கிய பங்குண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in