உக்ரைன் பள்ளி மீது ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: உள்துறை அமைச்சர் உள்பட 17 பேர் பலி

உக்ரைன் பள்ளி மீது  ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: உள்துறை அமைச்சர் உள்பட 17 பேர் பலி

உக்ரைன் தலைநகர் வீக் நகரில் தொடக்கப்பள்ளி மீது ஹெலிகாப்டர் விழுந்தது. இதில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் டென்னிஸ் மொனாஸ்டிர்ஸ்கி மற்றும் இரண்டு பள்ளிக்குழந்தைகள் உள்பட 17 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் உள்துறை அமைச்சர் டென்னிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் யூரி லுப்கோவிச் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது உக்ரைன் தலைநகர் கீவ் புறநகர் பகுதியான ப்ரோவரியில் உள்ள தொடக்கப் பள்ளியின் மீது ஹெலிகாப்டர் மீது விழுந்தது. இதில் அமைச்சர் டென்னிஸ் மொனாஸ்டிர்ஸ்கி மற்றும் இரண்டு மாணவர்கள் உள்பட 17 பேர் பலியாகினர். இதில் 9 பேர் ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்கள் ஆவர்.

இந்த விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பள்ளிக்குழந்தைகள் உள்பட 22 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மீட்புப்படையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து நாசவேலை காரணமாக நடந்ததா என்பது குறித்து உக்ரைன் ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in