கொட்டிய கனமழை; திடீரென மூழ்கடித்த பெருவெள்ளம்: ஆப்கானிஸ்தானில் சோகம்

கொட்டிய கனமழை; திடீரென மூழ்கடித்த பெருவெள்ளம்: ஆப்கானிஸ்தானில் சோகம்

வடக்கு ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபானின் அரசு நடத்தும் பக்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பர்வான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் பக்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த திடீர் வெள்ளம் காரணமாக பர்வான் மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த மாகாணத்தில் கனமழையால் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என்று உள்ளூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி ஜூலை மாதத்தில் 40 பேரும், ஜூன் மாதத்தில் 19 பேரும் உயிரிழந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in