ஹமாஸ் வடகொரியாவின் ஆயுதங்களை பயன்படுத்துகிறது... இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஹமாஸ் வடகொரியாவின் ஆயுதங்களை பயன்படுத்துகிறது... இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு!

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு, வடகொரியாவின் எப் - 7 ஏவுகணைகளை பயன்படுத்தி வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது, “வடகொரிய ராணுவத்தில் எப்7 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஏவுகணைகள் வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு கடத்தப்படுகின்றன. அங்கிருந்து ஹமாஸ் அமைப்பினருக்கு ஏவுகணைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய போரில் வடகொரிய ராணுவத்தின் எப் -7 ரக ஏவுகணைகளை ஹமாஸ் அமைப்பினர் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இஸ்ரேல் பகுதிகளில் விழுந்த ஏவுகணைகளை ஆய்வு செய்தபோது, அவை எப்7 ஏவுகணைகள் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. வடகொரியாவின் பீரங்கிகளை தாக்கி அழிக்கும் பீனிக்ஸ் ஏவுகணைகளும் ஹமாஸ் வசம் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம்.

போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பினரிடம் ஆயுதங்களின் கையிருப்பு குறைந்து வருகிறது. இப்போதைய நிலையில் அவர்களிடம் சுமார் 1,000 ஏவுகணைகள் மட்டுமே இருக்கக்கூடும். அந்த அமைப்புக்கான ஆயுத விநியோக சங்கிலி முழுமையாக துண்டிக்கப்பட்டு உள்ளது” என்று இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in