மருத்துவமனை அடியில் ஹமாஸ் போராளிகளின் ரகசிய பதுங்கு தளம்... வீடியோ வெளியிட்டு அம்பலப்படுத்தும் இஸ்ரேல்

காசாவில் ஹமாஸ் சுரங்கப்பாதை
காசாவில் ஹமாஸ் சுரங்கப்பாதை

பொதுமக்களுக்கான குடியிருப்புகள், பள்ளிகள், அகதிகள் முகாம் மற்றும் மருத்துவமனைகளை பயன்படுத்தி, இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களை ஹமாஸ் மேற்கொள்வதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. தற்போது அதற்கான ஆதாரமாக வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

அக்.7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் ஆயுதக் குழுவின் கொடூரத் தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் காசா மீதான தாக்குதல் நடவடிக்கைகள், ஒரு மாதத்தை கடந்தும் தொடர்ந்து வருகின்றன. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைகள் சர்வதேச நாடுகள் மத்தியில் கடுமையான கண்டனத்துக்கும் ஆளாகி வருகின்றன.

ஹமாஸ் சுரங்கப்பாதை மற்றும் வெடிகுண்டுகள்
ஹமாஸ் சுரங்கப்பாதை மற்றும் வெடிகுண்டுகள்

காசாவின் பள்ளிகள், மருத்துவமனைகள், மதவழிபாட்டுத் தலங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் அகதிகள் முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக அவை குற்றம்சாட்டின. இதனால் கொத்துக்கொத்தாக கொல்லப்படும் அப்பாவி பொதுமக்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தொட்டுள்ளது. அவர்களில் 40 சதவீதத்தினர் குழந்தைகள் மற்றும் சிறார் என்பது அதிர்ச்சி அளித்துள்ளது.

ஹாமாஸ் ஆயுதக் குழுவினருக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் இஸ்ரேல் இன அழித்தொழிப்பை மேற்கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் மத்தியில் கண்டனங்கள் அதிகரித்தன. தங்கள் தரப்பை நியாயப்படுத்த இஸ்ரேல் பலவகையிலான விளக்கங்களை அளித்து வருகிறது.

ஹமாஸின் ஆயுதக்குழுவான அல்-கஸாம், கசாவின் குடியிருப்புகள், மருத்துவமனைகள், அகதிகள் முகாம் ஆகிய இடங்களில் பதுங்கி இருப்பதாகவும், பொதுமக்களை கேடயமாக அவர்கள் பயன்படுத்துவதால் உயிர்ப்பலிகள் அதிகரிப்பதாகவும் இஸ்ரேல் விளக்கம் தந்தது.

ஹமாஸ் மறைவிடங்களை விளக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்
ஹமாஸ் மறைவிடங்களை விளக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்

தற்போது தங்கள் தரப்புக்கு வலுசேர்க்கும் வகையில், ஹமாஸின் ஆயுதக் குழுவினர் எவ்வாறு சுரங்கப் பாதைகளை அமைத்து மருத்துவமனை ஒன்றை தங்கள் மறைவிடமாக பயன்படுத்தினார்கள் என்றும், அங்கே இஸ்ரேலின் பிணைக்கைதிகளை எவ்வாறு அடைத்து வைத்திருந்தனர் எனவும், 6 நிமிடங்களுக்கு நீளும் வீடியோ ஒன்றினை வெளியிட்டு பரபரப்பு கிளப்பி உள்ளது.

குண்டு துளைக்காத தரை திறப்புக்கு கீழே 20 மீ ஆழத்தில் அமைந்திருக்கும் சுரங்கப்பாதை, அவை மருத்துவனையின் தரைகீழ் தளத்துடன் இணைக்கப்பட்டிருப்பது ஆகியவை அந்த வீடியோவில் விளக்கப்படுகின்றன. சந்தேகம் எழாதிருப்பதற்காக பள்ளி வளாகம், ஐநா அலுவலகம் ஆகியவை அமைந்திருக்கும் பகுதியில் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் பதுங்கி செயல்பட்டதையும் அந்த வீடியோ விவரிக்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

சிவகாசி : தீபாவளிக்கு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை!

நாளை தெறிக்கப் போகுது தமிழகம்... 234 தொகுதிகளில் 8,647 கி.மீ தூரம் திமுக வாகனப் பேரணி!

பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி: 108 ஆம்புலன்ஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: தொடர் மழையால் விவசாயிகள் கண்ணீர்!

ரூ.40 லட்சம் மதிப்புள்ள இறால்கள் மடிந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in