‘இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்படும் இஸ்ரேலியர்கள்’ ஹமாஸ் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்த காசா
இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்த காசா

காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் போர் விமானங்களால், அங்கு பணயக்கைதிகளாக தாங்கள் பிடித்து வைத்திருந்த இஸ்ரேலியர்கள் பலியாகி வருவதாக ஹமாஸ் குற்றம்சாட்டி உள்ளது.

இஸ்ரேலிய போர் விமானங்களால் வெள்ளியன்று குண்டு வீச்சுக்கு ஆளான, காசாவின் 4 இடங்களில் தங்கள் வசமிருந்த 13 பணயக்கைதில் பேர் பலியாகி இருப்பதாக ஹமாஸின் ஆயுதக்குழுவான அல்-காசம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் இஸ்ரேலில் இருந்து பணயக்கைதிகளாக, ஹமாஸ் அமைப்பினரால் காசாவுக்கு கொண்டுவரப்பட்டவர்கள். இவர்களில் இஸ்ரேலியர் மட்டுமன்றி சில வெளிநாட்டினரும் அடங்குவர்.

இஸ்ரேல் குண்டு வீச்சில் உருக்குலைந்த காசா
இஸ்ரேல் குண்டு வீச்சில் உருக்குலைந்த காசா

கடந்த சனியன்று அதிகாலையில் ஹமாஸ் போராளிகள் காசா எல்லைக்குள் இருந்து இஸ்ரேல் நோக்கி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவித் தாக்கினார்கள். மேலும் எல்லை தாண்டிச் சென்று இஸ்ரேல் உள்ளேயும் நேரடித் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது தங்களிடம் சிக்கியவர்களை பணயக்கைதிகளாக காசாவுக்கு கடத்திச் சென்றனர். இஸ்ரேல் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மட்டுமன்றி சில வெளிநாட்டினர் உட்பட சுமார் 150 பேர் இவ்வாறு பணயமாக ஹாமாஸ் பிடியில் சிக்கியிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்தது.

சுமார் 24 லட்சம் மக்கள் வசிக்கும் காசா மீதான பதிலடித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியபோது, எந்தவொரு எச்சரிக்கையும் இன்றி காசா குடிமக்களின் குடியிருப்புகளிலும் குண்டுகள் வீசப்பட்டதாக பாலஸ்தீனியர்கள் குற்றம்சாட்டினர். ’அப்பாவி காசா மக்களை கொல்லும் இஸ்ரேலின் போக்கு அதிகரித்தால், குடியிருப்பின் மீது விழும் ஒவ்வொரு குண்டுக்கும், தங்கள் வசமிருக்கும் இஸ்ரேல் பணயக்கைதிகளில் ஒருவரை கொல்வோம்’ என்றும் அல்-காசம் குழுவினர் அறிவித்திருந்தனர்.

ஹமாஸ் அமைப்பினர்
ஹமாஸ் அமைப்பினர்

இந்த சூழலில் பணயக்கைதிகளின் சாவுக்கு இஸ்ரேலை ஹமாஸ் பழி சொல்லியிருப்பது சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இஸ்ரேல் வான் தாக்குதலில் பலியானவர்களில் வெளிநாட்டவர் குறித்த முழு விவரங்களை ஹமாஸ் இன்னமும் வெளியிடவில்லை. அல்-காசம் வெளியிட்டிருக்கும் இஸ்ரேலியர் உயிர்ப்பலி தகவலை இஸ்ரேலும் இன்னும் உறுதி செய்யவில்லை.

இதையும் வாசிக்கலாமே...

நாளை மகாளய பட்ச அமாவாசை: இந்த விஷயங்களை மறக்காதீங்க!

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள்  அதிர்ச்சி!

இந்த வருஷம் கேம்பஸ் இன்டர்வியூ கிடையாது.. பிரபல ஐடி நிறுவனம் அறிவிப்பு!

செம மாஸ் அறிவிப்பு... இன்று மெட்ரோ ரயிலில் பயணிக்க கட்டணம் கிடையாது!

மனைவி தற்கொலை... விரக்தியில் உயிரையிழந்த கணவர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in