மேலும் 8 அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த கோத்தபய: டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீண்டும் வாய்ப்பு

மேலும் 8 அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த கோத்தபய: டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீண்டும் வாய்ப்பு

இலங்கையில் 13 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 8 அமைச்சர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் இன்று 8 அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஹிந்த அமரவீர பதவியேற்றுக் கொண்டார்.

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா, நீர் வழங்கல் முகாமைத்துவ அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல, கைத்தொழில் அமைச்சராக ரமேஷ் பத்திரண, பௌத்த சாசனம் , மத விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சராக விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

சுற்றுச்சூழல் அமைச்சராக அஹமது நசீர், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், நீர்பாசனத்துறை அமைச்சராக ரொஷான் ரணசிங்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் , ஊடகத்துறை அமைச்சராக பந்துல குணவர்தன ஆகியோர் கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in