
ஷார்ஜாவில் விற்பனைக்கு வந்த ரூ.3,39,77,348 மதிப்பிலான தங்க சைக்கிள் பார்வையாளர்களை வாய்பிளக்கச் செய்தது.
ஷார்ஜா ’வாட்ச் மற்றும் நகைகளுக்கான 52வது மத்திய கிழக்கு கண்காட்சி’க்காக, சவுதி அரேபியாவின் அல் ரொமைசான் என்ற தங்க நகை நிறுவனம் சார்பில் இந்த தங்கத்தினால் இழைக்கப்பட்ட சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சைக்கிளின் விலை, அந்நாட்டு கரன்சியான திர்ஹாம் மதிப்பில் 1.5 மில்லியனாகும். இதை இந்திய ரூபாய் மதிப்பில் 3,39,77,348 என மதிப்பிடலாம். மொத்தம் 7 கிலோ எடையிலான இந்த சைக்கிளில், 4 கிலோ எடைக்கு தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது.
தங்கம் சேர்க்கப்பட்டதைவிட, அதனை ஒரு ஆபரணப் பொருளுக்கு இணையாகவும், பிரத்யேக சைக்கிளின் உருவாக்கம் கெடாதும் அல் ரொமைசான் நிறுவனத்தின் 20 விற்பன்னர்கள் குழு கூடி சாதித்துள்ளது. இதற்காக அவர்கள் 6 மாதங்களை எடுத்துக்கொண்டார்கள்.
வரவேற்பறை முதல் கழிவறை வரை தங்கத்தால் இழைப்பதில் நாட்டம் கொண்ட வளைகுடா தேசங்களின் கோடீஸ்வரர்களை நம்பி இந்த தங்க சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. தங்க சைக்கிள் விலையைப் பார்த்து வாய் பிளப்பவர்களுக்காக, அதனை விட விலை அதிகமான ஆபரணப் பொருட்கள் பலவற்றையும் இந்த கண்காட்சியில் அடுக்கி வைத்தார்கள். அவற்றில் ஒன்று, 18 கேரட் பச்சை வைரங்கள் பொருத்தப்பட்ட ’சகுரா’ மோதிரம். இந்த மோதிரத்தின் விலை ரூ.24,13,97,450 மட்டுமே.
இதையும் வாசிக்கலாமே...
யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!
ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!
அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!
ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்