
காஸா மருத்துவமனை தாக்குதல் தொடர்பாக உண்மை தெரியும் வரை காத்திருக்க வேண்டும் என்று இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் கூறியுள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு இடையே 10 நாட்களுக்கு மேலாக தாக்குதல் நடந்து வருகிறது. இரு தரப்பினரும் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனிடையே, காஸாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதனிடையே, காஸா மருத்துவமனை தாக்குதல் தொடர்பாக உண்மை தெரியும் வரை காத்திருக்க வேண்டும் என்று இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "இந்த விவகாரத்தில் பலரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர். இதைத் தவறாக புரிந்துக்கொண்டால், இன்னும் அதிகமான உயிர்களை ஆபத்தில் ஆழ்த்திவிடும். உண்மைக்காக காத்திருங்கள். பிறகு தெளிவாகவும், துல்லியமாகவும் புகார் அளிக்கவும்" என்று தெரிவித்துள்ளார்.