உலகப் புகழ் 'பிரண்ட்ஸ்' தொடர் நடிகர் மர்ம மரணம்!

நடிகர் மாத்யூபெர்ரி
நடிகர் மாத்யூபெர்ரி

அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகர் மாத்யூபெர்ரி(54), மர்மமான முறையில் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் ' பிரண்ட்ஸ்' என்ற டிவி தொடர் பிரபலமானது. இதில் சாண்ட்லர் என்ற பாத்திரத்தில் நடித்து வந்தவர் மாத்யூ. 1994 முதல் 2004 வரையிலான இந்த டிவி தொடரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். சமீப காலமாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் போதை பழக்கத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை அவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து பயன்படுத்தியதன் காரணமாக மரணம் அடைந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனாலும், உயிரிழப்பிற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மறைவால் ரசிகர்கள் பலர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in