முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு: பாகிஸ்தானில் உச்சகட்ட பதற்றம்

இம்ரான் கான்.
இம்ரான் கான்.

வஜிராபாத்தில் நடந்த பேரணியின் போது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

வஜிராபாத்தில் நடந்த பேரணியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்துகொண்டார். இன்று மாலை நடந்த பேரணியில் அவர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இம்ரான் கான் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்ரான் கானின் கண்டெய்னர் அருகே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அவர் கண்டெயினரில் இருந்து குண்டு துளைக்காத வாகனத்திற்கு மாற்றப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த மர்ம நபர் பல முறை துப்பாக்கியால் சுட்டார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமையன்று லாகூரில் தொடங்கிய நீண்ட பேரணிக்கு இம்ரான் கான் தலைமை தாங்கியுள்ளார். பிரதம மந்திரி ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராகவும், தனக்கு ஆதரவை பெருக்குவதற்காகவும் இந்த நீண்ட பேரணியை இம்ரான் கான் திட்டமிட்டிருந்தார். மூன்றரை ஆண்டுகள் பதவியில் இருந்த இம்ரான் கான், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in