அதிர்ச்சி... ஒரே வருஷத்துல 45 கிலோ எடை குறைத்த ஃபிட்னஸ் பிரபலம் அகால மரணம்!

அட்ரியானா தைசென்
அட்ரியானா தைசென்

பிரேசிலை சேர்ந்த உலகப் புகழ் ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்ஸர், தனது 49 வயதில் அகால மரணம் அடைந்திருக்கிறார். எடையிழப்பு தொடர்பான அவரது தீவிர உடலோம்பல் பயிற்சிகளே மரணத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

பிரேசில் தேசத்தை சேர்ந்தவர் அட்ரியானா தைசென். சமகாலத்தில் உலக மக்களை அதிகம் படுத்தும் ஃபிட்னெஸ் மற்றும் எடையிழப்பு தேவைகளுக்கு இவர் ஆலோசனைகளை வழங்கி வந்தார். இதனால் இன்ஸ்டாகிராம் உபயத்தில், இவரால் பயன்பெறுவோர் பிரேசிலை தாண்டியும் பரவியிருந்தனர்.

தனது 39வது வயதில் 100 கிலோ எடையுடன் அவதிப்பட்டபோது இவருக்கு, உடலோம்பல் மற்றும் எடையிழப்புக்கான விழிப்புணர்வு பிறந்தது. பல்வேறு சாத்தியங்களை பரிசீலித்த இவர், பிற்பாடு நடப்பில் உள்ள பலவற்றையும் கலந்துகட்டி புதுவித பயிற்சி முறைகளை உருவாக்கினார். தீவிர டயட் மற்றும் உடற்பயிற்சிகள் வாயிலாக உடல் எடையை குறைக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றார்.

அப்படி, ஒரே வருடத்தில் அட்ரியானா தைசென் 45 கிலோ இழந்தது பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது. சீரான உணவு மற்றும் கடுமையான உடற்பயிற்சி முறையை உள்ளடக்கிய தனது எடை இழப்பு அனுபவங்களை, பக்க விளைவுகள் ஏதுமற்றதாக அவர் பிரச்சாரம் செய்தார். உலகெங்கும் ஆயிரக்கணக்கானோர் அதனை பின்பற்றவும் ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் அவரது திடீர் மரணம் அண்மையில் நிகழ்ந்திருக்கிறது. பிரேசிலின் உபர்லாண்டியாவில் அட்ரியானா தைசென் இறந்ததை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். அட்ரியானாவின் தீவிர எடையிழப்புக்கான பிரயத்தனங்களே அவரது அகால மரணத்துக்கு காரணம் என்று வெளியான செய்தி, அட்ரியானாவை பின்பற்றுவோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எடையிழப்பு முயற்சி காரணமாக புதுவகை நோயில் அட்ரியனா விழுந்ததும், அதிலிருந்து மீள முடியாது போனதும் அவரது மரணத்துக்கு காரணமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரது குடும்பத்தினர் தரப்பில், அட்ரியனா மரணத்தின் பின்னணி குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in