அதிர்ச்சி வீடியோ.. நேரலையில் பேசிக் கொண்டிருந்த பெண் செய்தியாளர், பின்புறத்தில் தொட்டுத் தடவிய இளைஞர்!

அதிர்ச்சி வீடியோ.. நேரலையில் பேசிக் கொண்டிருந்த பெண் செய்தியாளர், பின்புறத்தில் தொட்டுத் தடவிய இளைஞர்!

சாலையின் ஓரத்தில் நின்று, தொலைக்காட்சி நேரலை ஒன்றில்,பேசிக் கொண்டிருந்த பெண் நிருபரின் பின்னால் இருந்து நடந்து வந்த இளைஞர் ஒருவர், திடீரென பெண் நிருபரின் பின்புறத்தில் வந்து தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தது நிகழ்ச்சியை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த நேயர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஸ்பெயின் நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும்  பெண் செய்தியாளர் ஈஷா என்பவர், நேரலை நிகழ்ச்சி ஒன்றில் சாலையின் ஓரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார். கேமரா ஓடிக் கொண்டிருந்தது. ஸ்டூடியோவில் அமர்ந்திருந்த தொகுப்பாளர் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். 

அப்போது பெண் நிருபரின் பின்னால் இருந்து வந்த ஒருவர் அவரது பின் பக்கத்தை தட்டிவிட்டு செல்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நேரலை சென்று கொண்டிருப்பதால் இது குறித்து எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்  தொடர்ந்து தனது பணியைத் தொடர்கிறார். தனக்கு எதுவும் ஆகாதது போல் நடந்துகொண்டார். ஆனால் தொகுப்பாளர் இதை கவனித்து, பெண் பத்திரிகையாளரிடம் கேமராவில், "அந்த மனிதர் உங்களை அநாகரிகமாகத் தொட்டாரா?" என்று கேட்கிறார். இந்தக் கேள்விக்கு அந்தப் பெண் “ஆம்” என்று மழுப்பலாக பதிலளித்தார்.

இதற்குப் பிறகு, தொகுப்பாளர்,  ஈசாவிடம், ”அருகில் நிற்கும் அந்த நபரைப் பார்க்க வேண்டும். அந்த முட்டாளைக் கேமிரா முன்பாக நிறுத்துங்கள்” என கூறி, அவரிடம் பேசச் சொன்னார். அந்த நபரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக அவரருகில் சென்று அந்தப் பெண் கேள்விகளை எழுப்புகிறார். அதற்கு அந்த நபர் தான் எதையும் செய்யவில்லை என்று மறுக்கிறார்.  அவர் தனது செயல்களுக்காக வெட்கப்படாமல் கேமராவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். 

பின்னர் அங்கிருந்து சென்ற அந்த நபர், சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அங்கு வந்து ஈஷாவை சந்தித்தார். இது குறித்து செய்தி சேனலில் இருந்த தொகுப்பாளர், போலீஸாரிடம் தகவல் தெரிவிக்க, அடுத்த சில நிமிடங்களில் அந்த நபரை மாட்ரிட் போலீஸார் கைது செய்துள்ளனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in