பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் இலங்கையில் முடக்கம்!

பேஸ்புக், ட்விட்டர், யூடியூப்
இலங்கையில் முடக்கம்!

இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. அன்றாடம் 13 மணி நேரம் மின் வெட்டு அமலில் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் மாளிகை முன்பு நேற்று முன் தினம் இரவு போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் வன்முறையாக மாறியது. இதன் தொடர்ச்சியாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பான புகைப்படங்கள், காணொளிகளை பொதுமக்கள் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால் இலங்கையில் யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in