புயல்களைப்போல வெப்ப அலைகளுக்கும் பெயர் வைக்கத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்: முதல் பெயர் என்ன தெரியுமா?

புயல்களைப்போல வெப்ப அலைகளுக்கும் பெயர் வைக்கத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்: முதல் பெயர் என்ன தெரியுமா?

புயல்களுக்கு பெயர் வைப்பதைப் போலவே வெப்ப அலைகளுக்கும் ஐரோப்பிய நாடுகள் பெயர் சூட்ட ஆரம்பித்துள்ளன. ஸ்பெயின் நாட்டின் செவிலி நகரத்தில் வீசிய வெப்ப அலைக்கு “Zoe” என்று முதன்முறையாக பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே ஐரோப்பிய நாடுகள் வெப்ப அலையால் கடுமையால் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சிக்னல்கள், சாலைகள் உருகின, விமான ஓடுபாதைகள் இந்த வெப்பத்தை தாங்க முடியாமல் உருகியதால் சாலை மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெப்பத்தால் ஐரோப்பிய நாடுகளில் பல இடங்களில் காட்டுத்தீயும் ஏற்பட்டுள்ளது. இந்த கடும் வெப்ப அலைகளால் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகள் உள்ளிட்ட நாடுகளில் 1700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து புயல்களுக்கு பெயர் வைப்பதை போல, வெப்ப அலைகளுக்கும் பெயர் சூட்டும் வழக்கத்தையும் ஸ்பெயின் நாடு தொடங்கி வைத்துள்ளது. அந்த நாட்டின் செவிலி நகரத்தில் வீசிய வெப்ப அலைக்கு “Zoe” என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகில் வெப்ப அலைகளுக்கு இடப்பட்ட முதல் பெயர் இதுவாகும்.

மக்களிடம் பொதுவாக வெப்ப அலை வீசும் என்று சொல்வதற்கு பதிலாக, புயல்களை பெயருடன் அழைப்பதைப்போல பெயர்களுடன் வெப்ப அலைகளை குறிப்பிட்டால் அதன் தாக்கத்தின் அளவை புரிந்துகொண்டு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என உள்ளூர் வானிலை நிலைய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

வெப்ப அலைகளுக்கு பெயர் சூட்டுவது என முடிவு கடந்த மாதம் எடுக்கப்பட்டது. உள்ளூர் வானிலை அமைப்பான ProMeteo Sevilla மற்றும் அமெரிக்காவின் ராக்பெல்லர் பவுண்டேஷன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளனர். இதன்படி, வானிலை நிபுணர்கள் அடுத்து வருகின்ற ஐந்து நாட்களில் வீச இருக்கும் வெப்ப அலைகளை கணித்து அது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in