இஸ்ரேலில் 1 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு - என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

இஸ்ரேல் பிரதமருடன் இந்திய பிரதமர்
இஸ்ரேல் பிரதமருடன் இந்திய பிரதமர்

ஹமாஸ் அமைப்புடனான போரைத் தொடர்ந்து, பாலஸ்தீனியர்கள் வெளியேறியுள்ளதால், ஒரு லட்சம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இஸ்ரேல் முன்வந்துள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அகதிகள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர், ஒரு மாதத்தை எட்டியுள்ளது.

இந்த போரைத் தொடர்ந்து, இஸ்ரேலில் பணியாற்றி வந்த 90,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களுக்கான பணி உரிமத்தை, இஸ்ரேல் அரசு சமீபத்தில் ரத்து செய்துள்ளது. மேலும், இவர்கள் இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையால் இஸ்ரேலின் கட்டுமானத்துறையில் வெற்றிடங்கள் அதிகமாகி கட்டுமானத்துறை பாதிப்படைந்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் டாங்கிகள்
காசாவில் இஸ்ரேல் டாங்கிகள்

இதையடுத்து, வேலைவாய்ப்பு கொள்கையை இஸ்ரேல் அரசு சமீபத்தில் திருத்தியுள்ளது. இதன்படி, இந்தியாவில் இருந்து, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், "கட்டுமானப் பணிகள் பலவு தேங்கிக் கிடக்கின்றன. அதுமட்டுமில்லாமல் போரின் காரணமாக பல்வேறு சேதங்களும் நிகழ்ந்துள்ளன. கட்டுமானத் துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனர்களின் வெற்றிடத்தை நிரப்பவும், துறையை இயக்கி இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் தொழிலாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேல் அரசிடமும் அனுமதி கேட்டுள்ளோம். இரு நாடுகளும் சம்மதித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்" என இஸ்ரேலிய பில்டர்ஸ் அசோசியேஷன் துணை தலைவர் ஹைம் ஃபெய்க்லின் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 42,000 இந்தியர்களை இஸ்ரேலுக்கு வேலை செய்ய அனுமதிக்கும் ஒப்பந்தம் இந்தியா இஸ்ரேல் இடையே கடந்த மே மாதம் கையெழுத்தான நிலையில் இதுகுறித்து இரு நாடுகளும் என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில், இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து உள்ளது. இந்தப் போரை நிறுத்த வலியுறுத்தி, ஐ.நா., சபையில் சமீபத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவை தெரிவித்திருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in