அமெரிக்க அதிபர் தேர்தலில் திருப்பம்... டிரம்ப் ஆதரவாளராக மாறும் எலான் மஸ்க்

டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க்
டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முஸ்தீபுகளில் புதிய திருப்பமாக, டிரம்ப் ஆதரவு நிலைப்பாடுக்கு எலான் மஸ்க் நகர்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அங்கே சூடுபிடித்துள்ளன. ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என இரு வேட்பாளர்கள் மட்டுமே மோதும் அதிபர் தேர்தலில், கட்சிகள் தங்களது வேட்பாளரை தீர்மானிப்பதற்கான ஆயத்தங்களில் ஆழ்ந்துள்ளன. இதன் மத்தியில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை உலக கோடீஸ்வரர் பகிரங்கமாக எலான் மஸ்க் ஆதரிக்கப்போவதாக தெரிய வந்துள்ளது.

எலான் மஸ்க் - டொனால்ட் டிரம்ப்
எலான் மஸ்க் - டொனால்ட் டிரம்ப்

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் மத்தியில், தனது விஷமக் கருத்துகள் காரணமாக ட்விட்டர் தளத்தில் கண்டனங்களை பெற்றுவந்த டிரம்ப், ஒரு கட்டத்தில் அங்கிருந்து கட்டம் கட்டப்பட்டார். இதனால் வெறுப்புற்ற டிரம்ப், ட்விட்டருக்கு போட்டியாக ட்ரூத் சோஷியல் என புதிய சமூக ஊடகத்தை தொடங்கினார். ஆனால் டொனால்ட் ஆதரவாளர்களுக்கு அப்பால் அது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை.

இதனிடையே ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க், ட்விட்டரின் பயனர்களில் தடைக்கு ஆளான பிரபலங்கள் பலரையும் மீண்டும் ஆட்டத்தில் சேர்த்து வந்தார். அந்த வகையில் டொனால்ட் டிரம்பும் ட்விட்டரில் மீண்டு பிரவேசித்தார். அப்போது முதலே இருவருக்கும் இடையே நல்ல புரிதல் தொடங்கியது. இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் முரண்படவும் ஆரம்பித்தார் எலான் மஸ்க். 2021-ல் நடைபெற்ற மின் வாகனங்கள் தொடர்பான உச்சி மாநாட்டில் எலான் மஸ்கின் டெஸ்லாவுக்கு இடம் இல்லை என தெரிய வந்ததும் மஸ்க் நிலைப்பாடில் பெரும் மாற்றம் நிகழத் தொடங்கியது.

முன்னதாக 2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு தான் வாக்களித்ததாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால் ஒரே வருடத்தில் பைடனுக்கு எதிர் திசையில் நகர்ந்தார். இதையே இன்றைய தினத்தின்(மார்ச் 25) தனது எக்ஸ் தள பதிவு ஒன்றிலும் எலான் மஸ்க் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். அதில் தனது முந்தைய ஜனநாயகக் கட்சி ஆதரவை ஒப்புக்கொண்ட எலான் மஸ்க், தற்போது அமெரிக்காவுக்கு ’சிவப்பு அலை’ வேண்டும் என பதிவிட்டிருக்கிறார். சிவப்பு அலை என்பது குடியரசுக் கட்சியை குறிக்கக்கூடியது.

அதாவது மீண்டும் டிரம்ப் அதிபராக வரவேண்டும் என்பதை எலான் மஸ்க் வெளிப்படையாக பொதுவெளியில் தெரிவித்திருக்கிறார். ”தேர்தலுக்கு முன்பாக நான் ஒரு பரிசீலிக்கப்பட்ட முடிவை எடுக்க விரும்புவேன். ஒரு வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்தால், அதற்கான காரணத்தை நான் சரியாக விளக்குவேன்" என்று முன்னதாக தெரிவித்திருந்த எலான் மஸ்குக்கு, தற்போது அதற்கான சூழல் வந்திருக்கிறது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டொனால்ட் டிரம்ப் எக்ஸ் தளத்துக்கு திரும்பியதை அடுத்து தனது ட்ரூத் சோஷியலை எலான் மஸ்குக்கே விற்க முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகின. இவற்றின் பின்னணியில் இருந்து எலான் மஸ்கின் புதிய நிலைப்பாடு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தயாரிப்புகளின் மத்தியில் கவன ஈர்ப்பு பெற்றுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in