வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்த எலான் மஸ்க்- கிரிம்ஸ் தம்பதி

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்த எலான் மஸ்க்- கிரிம்ஸ் தம்பதி

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க்- கிரிம்ஸ் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 2021 டிசம்பரில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்க வார இதழான People பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ள கிரிம்ஸ், இருவரும் தற்போது பெண் குழந்தைக்கு பெற்றோராகி உள்ளோம் என்றும் குழந்தைக்கு ‘Exa Dark Sideral’ என பெயர் வைத்துள்ளதோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தங்கள் மகளை ‘Y’ என செல்லமாக இருவரும் அழைத்து வருவதாகவும், முதலில் தங்கள் மகளுக்கு வேறு பெயர் வைக்கவே இருவரும் விரும்பியதாகவும், வரும் நாட்களில் மேலும் குழந்தைகளை பெற்றெடுக்க விரும்புவதாகவும் கிரிம்ஸ் தெரிவித்துள்ளார். மூன்று முதல் நான்கு குழந்தைகள் வரை தங்களுக்கு வேண்டுமென விரும்புவதாக கூறியுள்ளார் கிரிம்ஸ்.

Related Stories

No stories found.