அர்ஜெண்டினாவில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்: அலறி அடித்து தெருக்களில் ஓடிய மக்கள்

அர்ஜெண்டினாவில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்: அலறி அடித்து தெருக்களில் ஓடிய மக்கள்

அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் தெருக்களில் அலறி அடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் கார்போடா பகுதியில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கின. இதனால் உறக்கத்தில் இருந்த பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்தபடி வீடுகளில் இருந்து பாதுகாப்பிற்காக தெருக்களில் ஓடினர்.

மேலும் நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பொருட்கள் உருண்டு ஓட கதவுகள், ஜன்னல்கள் ஆடியது தொடர்பான வீடியோக்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அத்துடன் சேதவிவரங்களும் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in