வீட்டுக்கு வீடு தனி விமானம்... ஆச்சரியம் தரும் அமெரிக்க நகரம்!

வீட்டுக்கு வீடு தனி விமானம்... ஆச்சரியம் தரும் அமெரிக்க நகரம்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேமரூன் ஏர்பார்க் என்று ஒரு சிறிய நகரம் உள்ளது. அங்கு வசித்து வரும் மக்கள் அனைவரும் வீட்டுக்கு வீடு தனித்தனியாக விமானம் வைத்துள்ளார்கள்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேமரூன் ஏர்பார்க் என்று ஒரு சிறிய நகரம் உள்ளது. அங்கு வசித்து வரும் மக்கள் அனைவரும் வீட்டுக்கு வீடு தனித்தனியாக விமானம் வைத்துள்ளார்கள். கலிபோர்னியாவில் உள்ள கேமரூன் ஏர்பார்க்-ல் வசிக்கும் மக்கள் தாங்கள் வேலைக்கு செல்லவும், பிசினஸிற்காகவும் ஆடம்பரமான தனிப்பட்ட விமானங்களை பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக இது போன்ற குடியிருப்பு நகரங்கள் ஃப்ளை-இன் கம்யூனிட்டிஸ் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், இங்கு அனுமதியின்றி, வெளியாட்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை, இங்கு வசிக்கும் உரிமையாளர்கள் அழைத்தால் மட்டுமே வெளியாட்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில், கேமரூன் ஏர்பார்க் போன்ற ரெசிடென்ஷியல் ஏர்பார்க் அல்லது ஃப்ளை-இன் கம்யூனிட்டிஸ் தனியாருக்குச் சொந்தமானவை என கூறப்படுகிறது. இங்கு குடியிருப்பாளர்கள் தங்களது சொந்த விமானங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக அங்கு பல ஏர்கிராப்ட் ஹேங்கர்கள் இருக்கின்றன. பைலட் லைசன்ஸ் மற்றும் விமானத்தை இயக்குவது பற்றிய முழுமையான விவரங்கள் தெரிந்தவர்களை தவிர, விமானத்தை இயக்க யாருக்கும் அதிகாரம் இல்லை

இப்பகுதியில் மொத்தம் 124 வீடுகள் உள்ளன. விமானங்கள் குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு முன்பாக தரையிறங்க மற்றும் அருகில் உள்ள விமான நிலையத்திற்கு எளிதாக செல்லவும் வசதியாக 100 அடி அகலத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கேமரூன் ஏர்பார்க் போலவே, ப்ளோரிடாவில் ஸ்ப்ரூஸ் க்ரீக் என்று அழைக்கப்படும் மற்றொரு ஏர்பார்க் உள்ளது. இங்கே தனியார் ஜெட் விமானங்கள் முதல் வரலாற்று விமானங்கள் வரை சுமார் 650 விமானங்கள் உள்ளன. இந்த ஸ்ப்ரூஸ் க்ரீக்கில் சுமார் 5,000 மக்கள் வசிக்கின்றனர். சுமார் 1,300 வீடுகள் மற்றும் 700 ஹேங்கர்கள் உள்ளன. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in