2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் டொனால்ட் டிரம்ப்: அதிரடி அறிவிப்பு!

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் டொனால்ட் டிரம்ப்: அதிரடி அறிவிப்பு!

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மூன்றாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 76 வயதான முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் புளோரிடாவில் உள்ள தனது அரண்மனையான மார்-ஏ-லாகோ இல்லத்தில் தனது ஆதரவாளர்களின் முன்பு இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

இது தொடர்பாக பேசிய அவர், “"அமெரிக்காவை மீண்டும் மகத்துவமாகவும், பெருமைக்குரியதாகவும் மாற்றும் வகையில், அமெரிக்க அதிபர் பதவிக்கான எனது வேட்புமனுவை இன்று அறிவிக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் பதவியில் இருந்து வெளியேறியபோது, ​​​​அமெரிக்கா அதன் பொற்காலத்திற்கு தயாராக இருந்தது" என்று கூறினார்.

மேலும், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சி கிடைக்காது என்பதை உறுதிப்படுத்துவேன் எனவும் கூறினார். டிரம்பின் வேட்புமனு அறிவிப்புக்கு உடனடியாக பதிலளித்த பைடன் "ட்ரம்ப் அமெரிக்காவை தோல்வியடைய செய்தார்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in