இந்தியாவுடன் மோத விரும்பவில்லை - கனடா பிரதமர் ட்ரூடோ திட்டவட்டம்!

இந்திய பிரதமர் மோடி - கனடா பிரதமர் ஜஸ்டின்
இந்திய பிரதமர் மோடி - கனடா பிரதமர் ஜஸ்டின்

நிஜ்ஜார் கொலையில் தொடர்பு இருந்தாலும் இந்தியாவுடன் மோத கனடா விரும்பவில்லை என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதால் இருநாட்டு உறவு பாதித்தது. கனடா தூதரக அதிகாரிகள் 40 பேர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பாஸ்போர்ட் வழங்குவது இப்போதுதான் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

இந்த பிரச்சினை பற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில்,’இந்தியாவுடனான சண்டை என்பதை கனடா இப்போது விரும்புவதாக இல்லை. ஆனால் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொலை விசாரணையில் ஒன்றிணைந்து செயல்படுமாறு இந்தியாவைக் கேட்டுக்கொள்கிறோம்.

பெரிய நாடுகள் சர்வதேச சட்டத்தை மீறினால், முழு உலகமும் அனைவருக்கும் மிகவும் ஆபத்தானதாகி விடும். எனவே இந்த விஷயத்தில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட கனடா விரும்புகிறது. ஆனால் இந்தியா வியன்னா உடன்படிக்கையை மீறியது. இந்தியாவில் உள்ள 40 க்கும் மேற்பட்ட கனடா அதிகாரிகளை வெளியேற்றியதால் ஏமாற்றம் அடைந்தேன். இது உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு கவலை அளிக்கிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நாங்கள் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாகவும், நேர்மறையாகவும் பணியாற்ற முயற்சித்தோம். நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். அதாவது இந்திய அரசின் தூதர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். இப்போது நாம் செய்ய விரும்புவது சண்டை அல்ல. ஆனால் நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி எப்போதும் சட்டத்தின் ஆட்சிக்காக சண்டை செய்வோம்’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in