`நேட்டோவில் இணையவில்லை; காலில் விழுந்து கெஞ்ச மாட்டேன்'

உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி வேதனை
`நேட்டோவில் இணையவில்லை; காலில் விழுந்து கெஞ்ச மாட்டேன்'

நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய வேண்டும் என்ற தனது மனநிலை மாறிவிட்டதாகவும், எதையும் காலில் விழுந்து கெஞ்சிப் பெறும் நாடாக உக்ரைன் இருக்கக்கூடாதுதான் எண்ணுவதாகவும் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் இதுவரை கொல்லப்பட்ட நிலையில், உலக நாடுகள் எந்த உதவியும் உக்ரைனுக்கு செய்யவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி. இதனிடையே, நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய வேண்டும் என்ற தனது மனநிலை மாறிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு ஸெலன்ஸ்கி அளித்த பேட்டியில், உக்ரைனை நேட்டோவில் இணைத்துக்கொள்ள அந்த அமைப்பில் உள்ள நாடுகள் முனைப்பு காட்டவில்லை என்பதை தான் புரிந்து கொண்டதாகவும், ரஷ்யாவுடனான போர் மற்றும் சர்ச்சைகளைக் கருத்தில் கொண்டே நேட்டோ அமைப்பு உக்ரைனை படையில் சேர்த்துக் கொள்ள அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதையும் காலில் விழுந்து கெஞ்சிப் பெறும் நாடாக உக்ரைன் இருக்கக்கூடாதுதான் எண்ணுவதாக கூறியுள்ள ஸெலன்ஸ்கி, தனக்கு வாக்களித்த மக்கள் சரணடைய தயாராக இல்லை என்றும் ரஷ்யாவால் சுதந்திரமான பகுதிகள் என அறிவிக்கப்பட்ட உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா மற்றும் டான்பாஸின் எதிர்காலம் குறித்து ரஷ்யாவுடன் விவாதிப்போம் என்றும் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in