8 இந்தியர்களுக்கு மரண தண்டனை - கத்தார் நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு!

அரிந்தம் பாக்சி
அரிந்தம் பாக்சி

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, கத்தார் நீதிமன்றத்தில் இந்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

கத்தாரின் அல் தஹ்ரா நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் நவ்தேஜ் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரவ் வசிஷ்ட் மற்றும் கமாண்டர்கள் சுகுநாகர் பகாலா, சஞ்சீவ் குப்தா, அமித் நக்பால், புர்னேந்து திவாரி, மாலுமி ராககேஷ் கோபகுமார் ஆகிய 8 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கத்தாரின் அதிநவீன நீர்மூழ்கி கப்பல் திட்டம் தொடர்பான ரகசியங்களை இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதில் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து கத்தார் நீதிமன்றத்தில் இந்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தீர்ப்பு - Justice
தீர்ப்பு - Justiceதீர்ப்பு - Justice

இது தொடர்பாக வௌியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது, “இந்திய அதிகாரி களின் குடும்பத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம் தேவையான சட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in